இந்தியாவில் கடந்த கல்வியாண்டில் 22% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதிகள் இருந்ததாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-2020 வரை, நாடடெங்கும் உள்ள அரசு பள்ளிகளில் 12% குறைவான பள்ளிகளிலேயே இணைய வசதி உள்ளதாகவும், அதே வேளையில் நாடெங்கும் உள்ள 30% வீகிதத்திற்கும் குறைவான பள்ளிகளில் கணினி வசதி உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
மேலும், கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தமாக 90% பள்ளிகளில் கணினி பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாகவும், சத்தீஸ்கர் (83%) மற்றும் ஜார்க்கண்ட் (73%) மாநிலங்கள் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கணினி வசதிகளை நிறுவுவதற்கு நிதிஒதுக்கியுள்ளதாகவும், அதே வேளையில் தமிழ்நாடு (77%), குஜராத் (74%), மகாராஷ்டிரா (71%) ஆகிய மாநிலங்களில் அரசுப் பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் கணினி வசதி அதிகமாகவுள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அசாம் (13%), மத்தியப் பிரதேசம் (13%), பீகார் (14%), மேற்கு வங்கம் (14%), திரிபுரா (15%) மற்றும் உத்தரப்பிரதேசம் (18%) ஆகிய மாநிலங்களில் உள்ள 5 ல் 1 பள்ளியில் மட்டுமே, கணினி பயன்பாட்டு நிலையில் உள்ளதாகவும், இதில் மிக மோசமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 5% அரசுப் பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளா (88%), டெல்லி (86%), குஜராத் (71%) ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சரிபாதிக்கும் மேல் இணையவசதி உள்ளதாகவும், கடந்த கல்வியாண்டில் மேல்நிலை பள்ளிப்படிப்பில் இடைநிற்றல் 17% மாக உள்ளதாகவும், கொரோனாவினால் இந்த மாணவர்கள் படிப்பை நிறுத்தியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரால் கடந்த கல்வியாண்டும், இந்தக் கல்வியாண்டும் இணையவழி வகுப்புகளே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.