Aran Sei

பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தலைவராக தனியார் வல்லுனர் நியமனம்: மல்லிகா சீனிவாசனை தலைவராக்கியது மத்திய அரசு

பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின்(பி.இ.எஸ்.பி)  தலைவராக ட்ராக்டர் அண்ட் பார்ம் எக்யுப்மெண்ட்ஸ் லிமிடெட் (TAFE) நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான மல்லிகா சீனிவாசன் நியமித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர்(chairman) வேனு சீனிவாசனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் பி.இ.எஸ்.பி தலைவர் பதவிக்கு தனியார்துறை வல்லுனர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதவி ஏற்கும் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியடையும் வரை மல்லிகா இந்தப் பதவியில் நீடிப்பார் என மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

பொதுத்துறை நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சைலேஷ், பி.இ.எஸ்.பியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.கே.குப்தா, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி சேகர் மிட்டல்  ஆகியோர் பி.இ.எஸ்.பியின் சேவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக பதவி  உயர்வு அடிப்படையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த பதவிக்களுக்கு, லேட்டரல் எண்டரி என்ற அடிப்படையில் தனியார்துறை வல்லுனர்களை நியமிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவின் விளைவாக இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பி.இ.எஸ்.பி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மல்லிகா சீனிவாசனின் கணவரும், டிவிஎஸ் மோட்டாரின் தலைவருமான வேணு சீனிவாசன், 2018 ஆம் ஆண்டில் சிலை திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு முன் ஜாமீன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்