Aran Sei

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களே மேலோங்கும் – மு.க.ஸ்டாலின்

னநாயகத்தில் மக்களின் விருப்பங்கள் மேலோங்கும் என்பதை வரலாறு நமக்கு போதிக்கிறது  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளனர்.

‘மக்களின் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது’ – சு. வெங்கடேசன்

வேளாண் சட்டங்கள் ஒன்றிய அரசால் வாபஸ் பெறப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ”அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விடாபிடியாக போராடி பாஜகவின் கொடுமையை எதிர்த்துள்ளீர்கள். இது உங்களின் வெற்றி. இப்போராட்டத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்த பிரதமர் மோடியை முழு மனதுடன் வரவேற்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்கள் மேலோங்கும் என்பதை வரலாறு நமக்கு போதிக்கிறது. காந்திய வழியில் இதைச் சாதித்ததற்காக அனைத்து விவசாயிகளையும் நான் வாழ்த்துகிறேன். விவசாயிகளின் உறுதிக்கு தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்