கடந்த பத்தாண்டுகளில் 278 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 81 விழுக்காடு சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்றும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பத்திரிக்கையாளர்கள் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் லாப நோக்கமற்ற சுயாதீன அமைப்பான சிபிஜே, செப்டம்பர் 1, 2011 முதல் ஆகஸ்ட் 31, 2021 வரை கொல்லப்பட்ட 278 ஊடகவியலாளர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது.
’லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்’ – வைகோ வேண்டுகோள்
இதில் 226 கொலைகளுக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக சிபிஜே தெரிவித்துள்ளது.
ஊழல், திட்டமிடப்பட்ட குற்றங்கள், தீவிரவாத குழுக்கள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்கள் ஆகியவற்றால் இந்தக் கொலைகள் நிகழ்ந்திருப்பதாக சிபிஜே குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு அற்ற நாடு என்ற பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சுடான் முதலிடத்தில் உள்ளது. குற்றவாளிகள் கண்டறியப்படாத 20 கொலைகளுடன் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட மோசமான இடத்தில் உள்ளன என சிபிஜே குறிப்பிட்டுள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.