Aran Sei

உச்சநீதிமன்றத்தில் இதுவரை 8 பெண்கள் மட்டுமே தலைமை நீதிபதிகள் – நீதிமன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவதை உறுதிப்படுத்த வேண்டி மனு

நீதிமன்ற உயர்பொறுப்புகளில் பெண்களின் பிரதிநித்துவதை அதிகப்படுத்த நடவடிக்கை வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து – என்.எஸ்.ஏ சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

பெண்களின் பிரதிநித்துவதை எண்ணிக்கையில் அதிகப்படுத்துவது மட்டும் அல்லாமல் பெண்களின் கண்ணியத்தை காப்பதற்கும், தனித்துவமாக முடிவு எடுக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி பிரிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 2020 வரை நியமிக்கப்பட்ட 247 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 8 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது கேரளா காவல்துறையினர் வழக்கு – ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

மேலும், தற்போது இந்தியாவில் உள்ள 25 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் நீதிபதி.ஹிமா கோலி மட்டுமே தலைமை நீதிபதியாக உள்ளதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நீதிபதி.இந்திரா பானர்ஜி மட்டுமே நீதிபதியாக உள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தி பிரிண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறையில் மொத்தமாக உள்ள 1080 மொத்த பணியிடங்களில் 661 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் அதில் 11.04 % அதாவது 73 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி அரசு அரசியல்சாசன தினத்தை கொண்டாடுவது நகை முரண் – எஸ்.என்.சாஹூ

மேலும் மணிப்பூர், மேகாலயா, உத்தரகண்ட், பாட்னா, திரிபுரா ஆகிய ஐந்து உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதிகள் கூட இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி பிரிண்ட் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்