Aran Sei

ஆப்கானிஸ்தானில் 6ஆம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை – தாலிபன் அரசு உத்தரவு

Credit: The Hindu

ப்கானிஸ்தானில் 6 வகுப்பிற்கு மேலாக பெண்களுக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு தாலிபன்கள் தலைமையிலான புதிய அரசு தடை விதித்துள்ளது.

கல்வியாண்டின் தொடக்க நாளான மார்ச் 23 தேதி இந்த அறிவிப்பு வந்துள்ளதாக தாலிபன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குக் கல்வி மற்றும் பொது இடத்திற்கு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு தாலிபன்களை சர்வதேச சமூக வலியுறுத்தி வரும் நிலையில், தாலிபன்களின் இந்த அறிவிப்பு கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாரத்தின் முற்பகுதியில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருமாறு கல்வி அமைச்சகத்தின் சார்பில் அறிக்கை வெளியாகி இருந்த நிலையில், இந்த திடீர் முடிவு வெளியாகி வருகிறது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி – நோட்டீஸ் அனுப்பிய மத்திய பிரதேச அரசு

ஆப்கானிஸ்தானின் கிராமப்பகுதி மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள் பெண்களை பள்ளிக்கு அனுமதிக்க மறுத்த நிலையில், தாலிபன்களின் இந்த முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டின் பொரும்பாலான பகுதியில் 6ம் வகுப்பிற்கு அப்பால் பெண்கள் பள்ளி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான மாகாணங்களில் பெண்கள் கல்வி மற்றும் பெண்களுக்கான கல்வி நிறுவனங்களை மூடிவிட்டன.

தலைநகர் காபூலில் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தடையின்றி செயல்பட்டு வருகின்றன.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

மதரீதியாக இயக்கப்படும் தாலிபன் நிர்வாகம், 6 வகுப்புகளுக்கு அப்பால் பெண்களைச் சேர்ப்பது அவர்களின் அடித்தளத்தை சிதைத்துவிடும் என்று அஞ்சுகிறது என்று தாலிபன் வெளியுறவுகள் மற்றும் நன்கொடையாளர் பிரதிநிதியுமான வஹீதுல்லா ஹாஷ்மி கூறியுள்ளார்.

பெண்கள் எப்போது அல்லது எப்படி பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தலைமை முடிவு செய்யவில்லைஎன்று ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்த பட்டியலினத்தவர் – மன்னிப்பு கேட்கவைத்து வன்கொடுமை செய்த இந்துத்துவாவினர்

இஸ்லாமிய உடையின் அடிப்படையில் தலிபான்கள் கேட்ட அனைத்தையும் நாங்கள் செய்தோம், பெண்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அவர்கள் உறுதியளித்தனர், இப்போது அவர்கள் தங்கள் வாக்குறுதியை மீறிவிட்டனர்என்று ஆப்கானிஸ்தான் தலைநகரில் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய உள்ளூர் பத்திரிகையாளர் மரியம் நஹீபி கூறியுள்ளார்

பெண்களின் உரிமைகளுக்காக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, “அவர்கள் எங்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லைஎன்றும் தெரிவித்துள்ளார்.

Source: AP

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்