Aran Sei

இந்திய சந்தைகளின் செயல்திறன் மேம்படுத்தப்படும் – விவசாய சட்டங்கள் குறித்து அமெரிக்கா கருத்து

ந்தியாவில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டம், வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்றும், இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அதிக தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான  கேள்விக்கு, புதன்கிழமை (பிப்ரவரி 3 ஆம் தேதி) பதிலளித்த, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், இரு தரப்புகளுக்கு இடையிலான வேறுபாடுகள் உரையாடலின் மூலம் தீர்க்கப்படுவதை அமெரிக்கா ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய தொழிலில் அதிக தனியார் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு அதிக சந்தை அணுகலை ஈர்க்கும் விதமாகவும், இந்திய அரசு மேற்கொள்ளும் விவசாயத் துறை நடவடிக்கைகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகம் ஆதரவளிப்பதாக, அமெரிக்க வெளியுறைத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் – உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு

இது தொடர்பாக ”இந்திய சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அதிக தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது” என்றும், ”இந்திய உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை போல, அமைதியான முறையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள், எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேலி ஸ்டீபன்ஸ், இல்ஹான் உமர், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸின் உறவினரும், வழக்கறிஞருமான மீனா ஹாரீஸ், பிரபல பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆகியோர், தங்களது ட்விட்டர் பதிவுகளில் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

” கணக்குகளை முடக்கா விட்டால், சிறைத்தண்டனை, அபராதம் ” – ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

 

விவசாய போராட்டங்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஆதரவு பதிவுகள் குறித்து கருத்து தெரிவித்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் கருத்துகள், ”தவறானது” மற்றும் ”தேவையற்றது” என்றும், இது ஒரு ஜனநாயக நாட்டின் உள்நாட்டு பிரச்னை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்