Aran Sei

விவசாய சட்டங்களை அமல்படுத்தக் கோரும் எதிர் கட்சிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை

Image Credit : Indian Express

த்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020-ஐ அமல்படுத்தக் கோரி 13 கட்சிகள் இடம்பெற்றுள்ள உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நிலைக்குழு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

30 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், நாகா மக்கள் முன்னணி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சிவசேனா, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் ஆகிய 13 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மூன்று விவசாய சட்டங்களில் இச்சட்டமும் ஒன்றாகும். இக்குழுவில் உள்ள கட்சிகளில் பெரும்பாலானவற்றின் நிலைப்பாடானது மூன்று விவசாய சட்டங்களுக்கும் எதிரானது. அதில், காங்கிரஸ் கட்சியானது இம்மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 

போராடும் விவசாயிகளுக்கு பாஜகவின் கூட்டணி கட்சி ஆதரவு: தொழிலதிபர்களை மகிழ்விப்பதுதான் அரசின் நோக்கமா எனவும் கேள்வி

இந்நிலையில், நேற்று (மார்ச் 19), திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பாண்டியோ பாத்யாய் தலைமையிலான அந்நிலைக்குழு மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், “அண்மையில் இயற்றப்பட்ட ‘அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்மானது (2020), மேம்பட்ட முதலீடுகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்கி, அதன் வழியாக விவசாய துறையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வளங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒரு ஊக்க சக்தியாக இருக்கும். இதன் வழியாக, விவசாய விளைப்பொருள் சந்தையில் ஆக்கப்பூர்வமான போட்டியை உருவாக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் பங்குதாரர்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் எந்தத் தடங்கலுமின்றி கிடைக்க இச்சட்டத்தின் கீழ் வழிவகை செய்யவும் என்று அக்குழு கோரியுள்ளது.

‘ஒரு நாய்க்கு தெரிவிக்கப்படும் இரங்கல், இறந்தபோன 250 விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை’ – மேகாலயா ஆளுநர்

மேலும் அவ்வறிக்கையில், ’அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு – காரணங்களும் விளைவுகளும்’ குறித்த கூறுகையில், “விவசாய விளை பொருட்களில் பெரும்பாலானவற்றை  உபரியாக உற்பத்தி செய்யும் நிலையில் நம் நாடு உள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955-ல் பின்பற்றப்படும் வழிமுறைகளால்  கிடங்குகள், முக்கியமாக குளிர்சாதன வசதிக்கொண்ட சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றுக்கான முதலீடுகள் போன்றவை போதுமான அளவு இல்லாததால், விவசாயிகள் தங்கள் பொருட்களுக்குச் சிறந்த விலையைப் பெற முடியவில்லை.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இது போன்ற போதாமைகளால், பெரிய அளவிலான அறுவடைகளின்போது, ​​குறிப்பாக சீக்கிரத்தில் அழுகக்கூடிய விவசாய விளைப் பொருட்களின் பெரிய அளவிலான அறுவடைகளில் போது விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கிறார்கள். இவற்றுக்கு இன்னொரு காரணம், முறையான செயலாக்க திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பதாகும்.” என்று உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நிலைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்