Aran Sei

கொரோனா பரவலை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகள் – அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும்  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே. செந்தில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியாகியுள்ளது.

”தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுடன் இணைந்து பணிபுரியும் வகையில், 25 ஆயிரம் தன்னார்வலர்களைப் போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும். அப்போது தான், நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி, பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.

”அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்க வேண்டும். பயோ மெடிக்கல் பொறியாளர்களை நியமித்து உயிர்காக்கும் கருவிகளைப் பராமரிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

”மருத்துவமனைகளைக்கு ஏற்ப போதிய எண்ணிக்கையில், தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து, அவர்களுக்குத் தேவையான முகக்கவசம், முழு உடல்கவசம், கிருமிநாசினி போன்றவற்றை வழங்க வேண்டும். தற்போது பல அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா அல்லாத புறநோயாளிகள் பிரிவு, அவசரமில்லாத சாதாரண அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை நடைபெறுகின்றன. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆக்சிஜன் பயன்பாடு அத்தியாவசியமற்ற சேவைகளில் வீணாகிறது” என கூறியுள்ளார்.

”இவற்றை முற்றிலுமாக நிறுத்துவதன் மூலம் அனைவரையும் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு  அரசு அறிவித்த நிவாரணங்களை வழங்குவதோடு, பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.” என கே. செந்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்