Aran Sei

வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படுவோரின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஐஎம்எஃப் எச்சரிக்கை

Image Credits: Reuters

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள், அந்த துறையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்த நடவடிக்கை என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இருந்தபோதும், இந்த சட்டத்தால் ஏற்படும் மாற்றங்களின் போது பாதிக்கப்படுபவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஐஎம்எஃப் கூறியுள்ளது.

புதிய சட்டங்கள் இடைத்தரர்களை ஒழிக்கும் என்று கூறியுள்ள ஐஎம்எஃப்-ன் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெர்ரி ரைஸ், அவை விவசாயிகளை பலப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – வரலாறு காணாத அரசு கொள்முதல்

“இடைத்தரர்கள் முறை ஒழிக்கப்படுவதால், விவசாயிகள் நேரடியாக வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவதன் மூலம் அவர்களுடைய லாபம் பெருகும், இதனால் கிராமப்புற வளர்ச்சி அதிகரிக்கும்” என்று ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவரிடம் செய்தியளார்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும்போது “இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் மாற்றங்களினால், பாதிக்கப்படுபவர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்று ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.

பாதிக்கப்படுவர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுடன் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை – துளியும் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் கருத்து

“சீர்திருத்தங்களினால் ஏற்படும் வளர்ச்சி என்பது, விமர்சனரீதியாக, அதன் செயல்படுதிறன் மற்றும் செயல்படுத்தப்படும் காலத்தையும் சார்ந்தது. ஆகவே, அந்த பிரச்சனைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து கடந்த ஆண்டு நபம்வர் 28ஆம் தேதி முதல், டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சட்டங்கள், விவசாயத்துறையில் கொண்டு வரப்பட்டுள்ள, மிகப்பெரிய சீர்திருத்தம் என்று கூறும் மத்தியஅரசு, இதன்மூலம் வவிசாயிகளின் லாபம் பெருகும் என்று கூறுகிறது.

ஆனால், விவசாயிகளோ இந்த சட்டங்கள், குறைந்த பட்ச ஆதார விலையை ஒழித்துவிடும் என்றும், மண்டிகள் மறைந்து அந்த இடத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றி விடுவார்கள் என்று கூறுகின்றனர்.

சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில், ஐஎம்எஃப் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாகவே, இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக இடதுசாரி பொருளாதார வல்லுநர்கள் கூறிவருது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்