2019-ம் ஆண்டு, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப் ) வழங்கிய நிபந்தனை கடனை எதிர்த்து ஏராளமான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால், ஈக்வடார் நாடு கடுமையான அமைதியின்மையை எதிர்கொண்டதையடுத்து ஏழு பேர் உயிர் இழந்தனர். இறுதியாக ஒதுக்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெற அரசு முடிவு செய்தது.
‘முற்போக்கு சர்வதேசம்’ (Progressive International) என்பது தனிநபர்கள் மற்றும் சர்வதேச குழுக்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பாக உள்ளது. இந்தக் கூட்டமைப்பு ’உலகெங்கும் உள்ள ஆர்வலர்களை இணைத்து, ஆதரித்து, அணிதிரட்டி வருகின்றது’. தற்போது, இக்கூட்டமைப்பு ஈக்வடார் மக்களின் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் ஈக்வடாருக்கு கடன் வழங்கியபோது சர்வதேச நாணய நிதியம் விதித்த பொருளாதாரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 15) சர்வதேச நாணய நிதியம் ஈக்வடாருக்கு வழங்கிய கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கான இறுதி நாள். முற்போக்கு சர்வதேசத்தின் கடன் நிதி செயற்குழு கூறுவதன்படி, நிதியமும் ஈக்வடார் அதிகாரிகளும் பிணை எடுப்பு நிதியிற்காக, நிதி வெட்டு, சம்பளக் குறைப்பு, விற்பனை முன்னெடுப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
“நாடு முழுவதும் அதிகரித்து வரும் அதிருப்திக்கு பதிலளிப்பதற்கும், பிணை எடுப்பு திட்டங்களை மாற்றுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இந்தத் திருத்தம் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், இந்த வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம். ஆகையால், ஈக்வடார் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்போக்கு சர்வதேசத்தின் இந்த அறிக்கையை உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் பொருளாதார வல்லுநர்கள் தயாரித்து கையப்பமிட்டுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.