Aran Sei

5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் உலகளாவிய தடுப்பூசி திட்டம் – முன்மொழிந்த சர்வதேச நாணய நிதியம்

credits : the indian express

ந்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு மக்களுக்கும், 2022 ஆம் ஆண்டு பாதிக்குள் குறைந்தபட்சம் 60 விழுக்காடு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில், 5000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உலகளாவிய தடுப்பூசி திட்டத்தைச் சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

ஜி20 நாடுகளின் சுகாதார உச்சிமாநாட்டில் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, “வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்மூலம், உலகம் சந்தித்திருக்கும் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும்” என தெரிவித்துள்ளார்.

”சமீபகாலமாக, பொருளாதார செல்வத்தின் ஆபத்தான வேறுபாடுகுறித்து நாங்கள் எச்சரித்து வருகிறோம். தடுப்பூசிகளை அணுகுவதில் பிணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையில் இடைவெளி விரிவடைவது நிலைமையை மோசமாக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்தத்தை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழு வேண்டுகோள்

”தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு மானியங்கள், உபரி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குதல், தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை எல்லைக்கடந்த விநியோகித்திற்கு வகை செய்தல் ஆகிய அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.

”இந்தத் திட்டதிற்கு அரசு வளங்கள், மானியங்கள், நிதியளிப்புகள் என 5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்” என கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.

Sources : Tribune India

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்