Aran Sei

மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரிய பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்

ருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரியப் பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு  இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள்மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மன மற்றும் உடல்ரீதியிலான தாக்குதலை பிரதமர் தலையிட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், தடுப்பு மருந்து செலுத்துவதின் மீது திட்டமிட்டே சில நபர்கள் பரப்பும் அவதூறுகளை கண்டிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்

மேலும், கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுவது குறித்து வதந்தியைப் பரப்புபவர்கள் மீது தொற்று நோய்கள் சட்டம், 1897, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஒன்றிய அமைச்சகத்தால் அனுமதிக்கப்படாத கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்து “அதிசய வைத்தியம்” அல்லது “அபூர்வ மருந்துகள்” என்று மக்களை முட்டாள் ஆக்கும் நபர்கள்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

‘கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழிந்த 624 மருத்துவர்கள் ’ – இந்திய மருத்துவ சங்கம் தகவல்

மேலும், கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு போதிய அளவில் மருந்து கிடைக்கவில்லை எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு குணமடைந்த பின்னர் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஆராய குழுவொன்றை அமைக்கவேண்டுமெனவும் இந்திய மருத்துவ சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்