கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையில் இதுவரை 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் கொரோனா இறப்பு பதிவேட்டின் படி, டெல்லியில் அதிகபட்சமாக 109 மருந்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, மொத்த மருந்துவர்களின் உயிரிழப்பில் ஆறில் ஒரு பங்கிற்கும் மேலாகும்.
அதற்கு அடுத்தபடியாக, பீகார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும், உத்தரபிரதேச மாநிலத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு, கொனோரா முதல் அலையில் நாடு முழுவதும் 748 மருத்துவர்கள் தொற்றால் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக, மே 22 ஆம் தேதி, அச்சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் ஆகியோரும் அடக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
கடந்த பத்து நாட்களில், 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் இரு அறிக்கைகளின் வழி தெரியவருகிறது.
முன்னர், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் துறைசார் வல்லுநர்களின் கூட்டு உணர்வையும், செயல்திறன்மிக்க அறிவாற்றலையும் கோரிக்கைகளையும் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, கள நிலவரத்தை உணராமல்இந்திய ஒன்றிய அரசு முடிவுகளை எடுக்கின்றது என்று இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source; ani
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.