Aran Sei

கொரோனா பாதிக்கப்பட்டோர் குறித்து பாபா ராம்தேவ் இழிவான கருத்து – நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ சங்கம் புகார்

க்சிஜன் தேவை ஏற்படும் கொரோனா நோயாளிகளையும், மருத்துவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது, இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) துணைத்தலைவர் மருத்துவர் நவஜோத் சிங் தாஹியா புகார் அளித்துள்ளார்.

பாபா ராம் தேவ் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “முறையாக சுவாசிக்க தெரியாத நோயாளிகள், ‘ஆக்சிஜன் பற்றாக்குறை’ இருப்பதாக கூறுவதன் மூலம் எதிர்மறையாக பேசி வருகின்றனர்” என அவர் பேசியிருப்பது பதிவாகியுள்ளது.

கொரோனா காலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் பிரதமர் மோடி, கொரோனாவை பரப்புகிறார், கொரோனா இரண்டாவது அலைக்கு அவர் தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்த இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் நவஜோத் சிங் தாஹியா, தற்போது ”மருத்துவர்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும்” சொற்களைப் பேசியதாக பாபா ராம்தேவ் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக ஜலந்தர் காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லரிடம் அவர் அளித்திருக்கும் புகாரில், ”கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பது தொடர்பாக பீதி ஏற்படுத்தும் வகையிலும், மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என்றும் பேசிய பாபா ராம்தேவ் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவர்களுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமதிக்கும் மொழியைப் பயன்படுத்தினார் என்றும், கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை வேண்டுமென்றே மீறியுள்ளதாகவும், மருத்துவர் நவஜோத் சிங் தாஹியா கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு இந்திய அரசு அறிவுறுத்தகளுக்கு எதிராக ஆலோசனை வழங்கிய பாபா ராம்தேவ், மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடாது போன்ற அறிவுறுத்தல்களால் நோயாளிகள் மரணிக்க காரணமாக இருப்பதாக, தாஹியா தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

Source: The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்