Aran Sei

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரியில் அனுமதியுங்கள் – மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை

க்ரைனில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்க்காலத்தைக் கருத்திக் கொண்டு, அவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளை சேர்ந்து படிப்பை தொடர வழிவகுக்குமாறு இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக, நேற்று (மார்ச் 4), பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அக்கடிதத்தில், “மாணவர்கள் தங்களுடைய மருத்துவ படிப்பின் எஞ்சிய கல்வியாண்டை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் வகையில், அவர்களுக்கு பொருத்தமான இடங்களை ஒதுக்கி, கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் ஒரு மருத்துவக் கல்லூரி மூடப்பட்டால், மற்ற மருத்துவ கல்லூரிகளில் மூடப்பட்ட மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடமளிக்கும் நடைமுறை உள்ளது. அதைப் பின்பற்றி இதைச் செய்யலாம்” என்று அச்சங்கம் பரிந்துரைத்துள்ளது.

உக்ரைன் போர்: ‘நவீனின் உடலுக்கு பதிலாக 10 பேரை விமானத்தில் கொண்டுவரலாம்’ –பாஜக எம்எல்ஏ

“இந்திய மருத்துவ கல்லூரிகளில் உக்ரைனில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு வசதியாக, மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் தேவைப்படும். இதன் விளைவாக, அம்மாணவர்கள் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்று வெளியே வரும்போது, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளைப் போல அல்லாமல், இந்திய மருத்துவப் பட்டதாரிகளைப் போல சிறப்பாக வருவார்கள்” என்று இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்