Aran Sei

நான் குற்றவாளி அல்ல, வருமான வரித்துறையை கண்டு அஞ்ச மாட்டேன் – நடிகை டாப்ஸி

நான் குற்றவாளி அல்ல, சட்டவிரோதமாக நான் எதையும் செய்யவில்லை எனவும் வருமான வரித்துறையினர் சோதனையைக் கண்டு அஞ்சமாட்டேன் எனவும் நடிகை டாப்ஸி பன்னு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி, வரி ஏய்ப்பு செய்ததாக, நடிகை டாப்ஸி பன்னு, இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆகியோர் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். இந்தச் சோதனை மூன்று நாட்கள் நடைபெற்றது.

மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து நடிகை டாப்ஸி பன்னு மற்றும் அனுராக் கஷ்யப் தங்கள் கருத்துகளை முன்வைத்து தான், இந்தச் சோதனைக்குக் காரணம் எனப் பலர் தெரிவித்தனர்.

டாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை – பேராட்டங்களை ஆதரித்தது காரணமா?

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹன்னா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களின் கருத்திற்கு எதிராக இந்திய பிரபலங்கள் கூட்டாக கருத்து தெரிவித்திருந்ததை டாப்சி விமர்சித்திருந்தார்.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நடிகை டாப்ஸியின் ட்விட்டர் பதிவு – விமர்சனம் செய்த நடிகை கங்கணா ரணாவத்

“ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால், நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார் டாப்சி.

நடிகை டாப்சி வீட்டில் சோதனை: பாரிஸ் பங்களா சாவி கிடைத்ததா? – வருமான வரித்துறையை பகடி செய்த டாப்சி

இந்நிலையில் இந்தச் சம்பவம் (வருமான வரித்துறையினர் சோதனை) தொடர்பாக நடிகை டாப்ஸி  தி குவிண்ட் இணையதளத்திற்கு அளித்துள்ள நேர்காணலின் சிறு பகுதி

அந்த நேர்காணலில், நடிகை டாப்ஸி, “என்னை அவர்கள் (வருமான வரித்துறையினர்) சந்தித்தபோது, டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் என்னுடைய மற்ற வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளயிருப்பதாகத் தெரிவித்தனர். இது போன்று நடக்கும் நான் எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக என் குடும்ப உறுப்பினர்கள் நினைக்கவில்லை அவர்களும் இதை எதிர்பார்க்கவில்லை, அவர்களுக்கு இது முற்றிலும் புதிதாக இருந்தது. அவர்கள் மிகவும் குழப்பமடைந்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

உரிமைகளுக்காக போராடுவதும், போராட்டங்களை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம் – இயக்குனர் வெற்றிமாறன்

”கடந்த இரண்டு வருடங்கள், வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்க கூடும் என்பதை உணர்த்தியுள்ளது. இது தான் நீங்கள் ஒரு பிரபலமாக இருப்பதற்கு கொடுக்க வேண்டிய விலை.  ஆனால், இதையெல்லாம் கண்டு நான் அஞ்சவில்லை. எந்தத் தவறும் செய்யாத பட்சத்தில் நான் ஏன் அஞ்ச வேண்டும். நான் குற்றவாளி கிடையாது, சட்டவிரோதமாக நான் எதையும் செய்யவில்லை. எனவே இதன் விளைவுகளைக் கண்டு  நான் அஞ்சவில்லை” என்று டாப்சி கூறியுள்ளார்.

”வருமான வரித்துறை சோதனை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இதற்கு அஞ்சி என்னை மாற்றிக்க் கொள்ள மாட்டேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘திரைத்துறையை கொச்சைப்படுத்தாதீர்’ – ஜெயா பச்சன் கண்டனம்

கடந்த 2013 ஆம் ஆண்டே இந்த நடிகர்களை வருமான வரித்துறையினர் சோதனையிட்டதாகவும், அப்போது இந்த அளவுக்கு எதிர்ப்பில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது தொடர்பாக பேசிய அவர், தான் 2013 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரால் சோதனை செய்யப்படவில்லை எனவும் மத்திய அமைச்சர் இவ்வாறு பேசுவது அதிர்ச்சியூட்டுவதாகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் பொது வெளியில் இவ்வாறு தவறான கருத்துக்களை தெரிவிப்பதை அவர் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் நடிகை டாப்ஸி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்