Aran Sei

நான் களத்தில் மக்களுடன் இருக்கிறேன் நீங்கள் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் : பிரதமரை விளாசிய மம்தா

ந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின், நந்திகிராம் தொகுதியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மம்தா பானர்ஜியின் முன்னாள் தளபதியும், சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவருமான சுவேண்டு அதிகாரி களம் காண்கிறார்.

‘மோடியின் தாடி வளர்கிறதே தவிர நாட்டின் பொருளாதாரம் வளரவில்லை’ – மம்தா பானர்ஜி கிண்டல்

இந்நிலையில், அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, ”கொரோனா தொற்று பரவிக் கொண்டிருந்தபோது பாஜக எங்கு இருந்தது? நான் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன், தனி மனித இடைவெளியை உறுதிப்படுத்தும் வட்டங்களை (Social distancing circles) கூட நான் வரைந்தேன். ஆனால், இந்திய பிரதமர் மோடி தன்னுடைய இல்லத்தில் அமர்ந்துக் கொண்டு, தன் உடல்நிலையை பத்திரமாக பார்த்துக் கொண்டு, தாடியை வளர்த்துக்கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலத்தின் காவல்துறையினரை கொண்டு வாக்காளரை பயமுறுத்துகின்றனர் – தேர்தல் ஆணையம் மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அவர், சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுக் கொண்டே, என்னுடைய வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், ஏன் ஜெய் சியா ராம் என முழக்கமிட மறுக்கிறீர்கள், ஏன் சீதையை விலக்குகிறீர்கள், நீங்கள் அனைவருமே பெண்களுக்கு எதிரானவர்கள் தான்” என்று கூறியுள்ளதாக என்டிடிவியின் செய்தி கூறுகிறது.

மோடியின் வங்கதேசப் பயணம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேலும், தான் எந்தத் தொகுதியில் இருந்தும் போட்டியிட்டுருக்கலாம் எனவும், நந்திகிராமின் தாயார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாகதான் நந்திகிராம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தேன் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்