Aran Sei

வங்க மண்ணில் பாஜகவினர் சுதந்திரமாக நடமாட முடியாது – எச்சரிக்கை விடுத்துள்ள மம்தா

credits : the hindu

னக்கு எதிராக சதி செய்பவர்களை வங்க மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எரியப் போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதியன்று, நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட  அவர், எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

அவருடைய இடது கால், இடுப்பு, தோல்பட்டை, கழுத்து ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

‘பாஜகவை வங்கத்தில் இருந்து துரத்த என் ஒரு கால் போதும்’ – சக்கர நாற்காலியில் பரப்புரை செய்த மம்தா பானர்ஜி

“மம்தா பானர்ஜி, தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வதை பலர் விரும்பவில்லை. அவரைத் தங்கள் பாதையில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். பாஜக தங்களைப் நினைத்து வெட்கப்பட வேண்டும், அவர்கள் ஒரு பெண்ணைத் தாக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறார்கள்” என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சவுகாதா ராய்  முன்னர் தெரிவித்திருந்தார்.

வங்க விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவேன் – மம்தா பானர்ஜி

இதையடுத்து, கடந்த மார்ச் 15 ஆம் தேதி, காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர், “நான் காயம் அடைந்திருக்கிறேன், உடல் நலமின்றி இருக்கிறேன், ஆனால் எனது இலக்கு அப்படியே உள்ளது. என் உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. 15 நாட்கள் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் நான் தொடர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து வங்கத்தை சுற்றி வர இருக்கிறேன். நான் ஓய்வு எடுத்துக் கொண்டால் வங்காள மக்களை யார் சென்றடைவார்கள்?” என்று அவர் கூறியிருந்தார்.

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம்: இந்த நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் – பாஜக தலைவர்

இந்நிலையில், நேற்றைய தினம், மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில்   சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட மம்தா பானர்ஜி,  ” எனது கால்களில் ஏற்பட்டுள்ள காயம் சிறிது ஆண்டுகளில் சரி செய்யப்பட்டுவிடும். இனி, வங்க மண்ணில் உங்களுடைய கால்கள் எவ்வாறு சுதந்திரமாக நடக்கிறது என்று நான் பார்க்கிறேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

நந்திகிராமில் நடந்த தாக்குதலைக் குறிப்பிட்டு பேசிய அவர், ”உடைந்த காலுடன் நான் வெளியே வரமாட்டேன் என்று பலர் எண்ணியிருப்பார்கள், ஆனால் என்னுடைய வலியைவிட, எனது மக்களின் நல் வாழ்வே முக்கியமானது. நான் எதிரிகளுடன்  களத்தில் சரிக்கு சமமாக சண்டையிடுபவள், நான் வாழ்க்கையில் பல காயங்களைச் சந்தித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பாஜகவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட்டு பேசிய அவர், ”பொய்களைப் பரப்புவது, கலவரங்களைத் தூண்டுவது தவிர இந்த மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அவர்கள் எதையும் செய்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்