Aran Sei

தடைசெய்யப்பட்ட பப்ஜி செயலிகள் – மீண்டும் தலையெடுக்கும் அவலம்

ந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி மொபைல் விளையாட்டு செயலி, மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. சட்டவிரோதமாக போட்டித் தொடர்களும் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு, தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குத் தடையாக இருப்பதாகக் கூறி, பப்ஜி உள்ளிட்ட 117 சீனச் செயலிகளுக்குத் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. அதற்கு முன்னதாக, கடந்த ஜூன் மாதம் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கும் ஜூலை மாதம் 47 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தென்கொரிய வீடியோ கேம் நிறுவனமான ப்ளூஹோலுக்குச் சொந்தமானது பப்ஜி என்றாலும், பதிப்புரிமை சீனாவின் டென்செண்ட் நிறுவனத்திடம் உள்ளது.

டிக்டாக் உள்ளிட்ட 58 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை – மத்திய அரசு அறிவிப்பு

அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து, ஒன்றிய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவுப்படி, பப்ஜி மொபைல், பப்ஜி மொபைல் லைட் ஆகிய செயலிகளின் சேவைகள் இந்தியாவில் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது என்று  அதிகாரப்பூர்வமாக பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, பப்ஜியை இந்தியப் பயனாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில், கூகுல் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பில் ஐஓஎஸ், ஆப் ஸ்டோர் போன்ற செயலிகள் தரவிறக்கம் செய்யும் தளங்களில் இருந்து பப்ஜி செயலிகள் நீக்கப்பட்டன. ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களின் செயலிகளும் முடக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பப்ஜி சர்வர்களும் முடக்கப்பட்டன.

ஒன்றிய அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு எதிராகவும் சட்டவிரோதமாகவும் இணையத்தில் பப்ஜி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு, பலரால் விளையாட்டப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது பப்ஜி மொபைல் கேம்

இந்நிலையில், வெளிப்ப்டையாகவே அச்செயலியை பதிவிறக்கம் செய்து, வெவ்வேறு குழுக்களுக்கிடையே போட்டிகள் நடத்தி, பரிசளிக்கும் நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக, வேல் யுனிவர்சிட்டி ட்ரோல்ஸ் என்ற முகநூல் பக்கம் வெளியிட்டுள்ள இப்போட்டிகான அழைப்பிதழில், நாளை (மே 23) காலை 11 மணியளவில், 25 பப்ஜி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருப்பதாக அறிவித்திருத்து, பப்ஜி பிரியர்களுக்கும் அழைப்பையும் விடுத்துள்ளது.

பதிவுக் கட்டணமாக ஒரு அணிக்கு ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகையான ரூ.1000 த்தில், முதல் இடத்தைப் பெறுபவர்களுக்கு ரூ.500, இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.300, மூன்றாம் அணிக்கும் ரூ.150 அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்மத்தை விளைவிக்கும் கேமிங் ஆப்கள் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை 

தொடரின் நாயகனுக்கு ரூ.100 ஊக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தாய்ப்பிலும் ஒரு முத்தாய்ப்பாக, இப்போட்டித் தொடரை, தங்களின் யூட்யூப் சானலிலும் நேரலை செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதை சட்டவிரோத செயற்பாடாக மட்டும் பார்க்காமல், இளைஞர்களின் உயிர் தொடர்பான பிரச்சனையாகவும் பார்க்க வேண்டியுள்ளது. இடைநிறுத்தலின்றி மணிக்கணக்கில் இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் மரணச் செய்திகள் இனி ஏற்படா வண்ணம் தடுக்க வேண்டும்.

போர்க்களத்தில் எதிர்ப்படையினரை சுட்டு வீழ்த்தி வெற்றிபெறும் மூர்க்கத்துடன் விளையாடப்படும் விளையாட்டான பப்ஜியால், மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு இளைஞர்கள் ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பப்ஜியை விட அதிக பயனாளிகளைக் கொண்ட ஃப்ரீ ஃபயர் போன்ற விளையாட்டுச் செயலிகளை தடை செய்யாதது ஏன் என்கிற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்