சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேற்வர்களுக்கு இங்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரோகிங்கியாக்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முகமது சலிமுல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ள பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஜம்முவில் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டிருக்கும் 150 ரோகிங்கியாக்களை உடனடியாக விடுதலை செய்யவும், ரோகிங்கியாக்களை நாடு கடத்துவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசிற்கு உத்தரவிடுமாறு சலிமுல்லா தனது மனுவில் கூறியிருந்தார்.
மோடியின் வங்கதேசப் பயணம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பாக, ஆஜரான துஷார் மேத்தா, “இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் இல்லை. அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இதுதொடர்பாக ஏற்கெனவே தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாங்கள் சட்டத்தைப் பின்பற்றுகிறோம். அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சாதி, மத மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு – காவல்துறைக்கு உத்தரவிட்ட டெல்லி அரசு
மேலும், “மியான்மர் அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரோகிங்கியாக்கள் தங்கள் நாட்டு மக்கள் தான் என்று மியான்மர் உறுதி செய்தபிறகு அவர்களை அங்கு அனுப்புவோம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மியான்மருக்கு அனுப்பி வைக்கமாட்டோம்.” என துஷார் மேத்தா கூறினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.