ஹரியானா அமைச்சரவை சட்ட விரோத மதமாற்றத் தடுப்பு மசோதா, 2022 க்கான வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு மசோதா தவறாகச் சித்தரிப்பது, கட்டாயப்படுத்தப்படுவது, செல்வாக்கைப் பயன்படுத்துதல், வற்புறுத்துதல், மோசடியான வழிகளில் மற்றும் திருமணம் வழியாக மதமாற்றம் செய்வதைத் தடை செய்து, அதனைக் குற்றமாக ஆக்கியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அடிப்படை உரிமையை வழங்குகிறது. மத சுதந்திரத்திற்கான தனிப்பட்ட உரிமையை மதமாற்றம் செய்வதற்கான கூட்டு உரிமையாக நீட்டிக்க முடியாது.
வலதுசாரிகளுக்கு எதிராக குரலெழுப்பிய முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது – தமுமுக அறிவிப்பு
ஏனெனில் மதச் சுதந்திரத்திற்கான உரிமை என்பது மதம் மாற்றுபவருக்கும், மதம் மாற விரும்பும் நபருக்கும் சமமாக உள்ளது. பல்வேறு மதங்கள் பின்பற்றப்படும் இந்தியா போன்ற நாட்டில் போலியான சமூக அமைப்புகளின் வழியாக மதம் மாற்றம் செய்யக்கூடிய முயற்சி நடந்து வருகிறது என்று மதமாற்ற வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற மதத்தினரை மதமாற்றம் செய்வதன் மூலம் தங்கள் சொந்த மதத்தின் பலத்தை அதிகரிக்கவும், தன்னுடைய மதம் பற்றிப் பொய் கூறியோ அல்லது உண்மையை மறைத்தோ திருமணம் செய்து கொண்டு பின்னர் தன் இணையரை தன்னுடைய மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு
இவ்வாறு கட்டாயப்படுத்தி மதம் மாற வைப்பது, தனிநபரின் மத சுதந்திரத்தை மீறுவதோடு, நம் நாட்டின் மதச் சார்பின்மைக்கு எதிராகவும் உள்ளதை ஏற்கமுடியாது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
18 வயதிற்குட்பட்ட வயதினர், பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினரைக் கட்டாய மத மாற்றம் செய்பவர்களுக்குச் சட்ட விரோத மதமாற்றத் தடுப்பு மசோதா 2022, அதிக தண்டனை வழங்க வழிவகுக்கிறது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.