Aran Sei

அம்பேத்கருக்கு நிகராக மோடியை புகழ்ந்துள்ள இசைஞானி இளையராஜா – மோடி, அம்பேத்கர் குறித்த புத்தகத்திற்கு முன்னுரை

புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள முன்னுரையின் சுருக்கமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், நதி நீர் மற்றும் பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை வகுத்தளித்தவர் டாக்டர் அம்பேத்கர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதா செய்தியை படித்தேன்.  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய நரேந்திர மோடி, நதி நீர் மற்றும் பாசனம் தொடர்பான அமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு அம்பேத்கர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

பாபாசாகேப் அம்பேத்கரை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, அவருடைய மதிப்பை அறிந்து, அவருடைய கருத்தை நடைமுறைப்படுத்துபவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த புத்தகம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சி பாதையில் தொழில்துறை தொடங்கி, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் வரையிலான துறைகளில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தையும் சந்திக்கும் இடத்தை ஆய்வு செய்ய முயல்கிறது.

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல சாதனைகளை படைத்துள்ளது. சாலைகள், ரெயில்பாதை, மெட்ரோ ரயில் மற்றும் அதிவேக சாலைகள் போன்ற உலக தரமான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

சமூக நீதி என்று வரும்பட்சத்தில், பல சட்டங்களை கொண்டு வந்தது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் போன்ற நடவடிக்கைகளால் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு நரேந்திர மோடி சட்டப்பாதுகாப்பை வழங்கியுள்ளார்.

ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு மோடி அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகளில் படித்தேன். இதனால் பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிப்பை தொடர முடியும்.

பெண்கள் முன்னேறத்திற்காக மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சிந்திக்கும் போது, இலவச எரிவாயு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளை பாகாப்பதற்காக சமூகத்திற்கு அவர் வழங்கியுள்ள செய்திகள் தான் நியாபகத்திற்கு வரும்.

‘குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைகொள்வார்.

மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கரின் மகத் குள போராட்ட உரை

ஆளுமைகளாக, அம்பேத்கரும் நரேந்திர மோடியும் ஒன்றுபடும் இடங்களையும் இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. இருவரும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்ததுடன் அதை ஒழிப்பதற்காக பாடுபட்டவர்கள்.

இருவரும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள். செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

பிரதமர் மோடி கட்டியமைக்கும் தற்சார்பு இந்தியா, விடுதலை போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும்.

நம் மண்ணின் மிகப்பெரிய மைந்தனின் பெருமையை வெளிப்படுத்துகிறது என்ற வகையிலும், நம் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி புதிய இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கின்றது என்ற வகையிலும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு நான் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்