Aran Sei

‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’: பதவியை ராஜினாமா செய்த பேராசிரியர் – விசாரணை நடத்த மாணவர் சங்கம் கோரிக்கை

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சாதி பாகுபாடு நிலவுவதாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர் விபின் பி விட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக நிர்வாகத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை, சிந்தாபார் என்ற மாணவர் அமைப்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த விபின், பணியில் சேர்ந்த ஆரம்பித்தில் இருந்தே சாதிய பாகுபாடுகளை அனுபவித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார் என சிந்தா பார் தெரிவித்துள்ளது.

சாதி பாகுபாடுகள் நடைபெற்றதற்கான பல்வேறு நிகழ்வுகளை அவர் குறிப்பிட்டிருப்பதாகவும், அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் அனைத்து தமிழ் செய்தி ஊடகங்களில் பதிவாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகார தொடர்புகள், பாலினம் என்று  எந்த பாரபட்சமுமின்றி அதிகாரத்தில் இருக்கும் தனிநபர்களால் பாகுபாடு காட்டப்படுகிறது” என விபின் கூறியிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த காரணங்களுக்காக ஐஐடியை விட்டு வேறு கல்வி நிறுவனத்திற்கு செல்வதாகவும், இந்த விவகாரங்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய பாகுபாடு மற்றும் பி.எச்.டி படிப்புகளில் இட ஒதுக்கீடுகள் மறுக்கப்படுவது குறித்து தொடர்ந்து செய்திகளில் சென்னை ஐஐடியின் பெயர் செய்திகளில் இடம்பெற்று வருகின்றது என  சிந்தா பார் குற்றம் சாட்டியுள்ளது.

ஐஐடியில் நடைபெற்று வரும் பாரபட்சத்தை நீக்கும் வழிமுறைகளை விரிவுபடுத்துமாறு, ஐஐடியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்புகளை கோரி வருவதாகவும் சிந்தா பார் தெரிவித்துள்ளது.

மேலும், உதவிப் பேராசிரியர் பதவி விலகியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்