Aran Sei

சென்னை ஐஐடி: EWS பிரிவினருக்கு உதவித்தொகை – ‘எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு நிதி ஒதுக்கவில்லை’ – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,

சென்னை ஐஐடி நிர்வாகம்  (இந்திய தொழில்நுட்பக் கழகம் –  மெட்ராஸ்) ‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் (EWS) சேர்ந்த இளந்தொழிற்நுட்ப (பி.டெக்) படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியில் இருந்து ஒரு பகுதியாக ரூ.10.5 கோடி உதவித்தொகை நிதியை ஒதுக்கியுள்ளது.

“இந்த நிதியானது சென்னை ஐஐடி-யில் தகுதியான மாணவர்களுக்கு உதவும். அவர்களின் கல்விக் கட்டணத்தை இந்த உதவித்தொகை வழியாக செலுத்த முடியும்” என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

2021-22 ஆம் நிதியாண்டில் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் (CSR) கீழ் உதவித்தொகைக்காக சென்னை ஐஐடி பெற்றுள்ள மிக அதிகபட்ச பங்களிப்பு இதுவாகும்.

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு: பதவி விலகுவதாக பேரா. விபின் பிரதமருக்கு கடிதம்

இந்நிகழ்ச்சியில் பேசியுள்ள சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “அனைவருக்குமான கல்வி நிறுவனம் என்பதே சென்னை ஐஐடி-யின் குறிக்கோள். இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு திட்டம் மற்றும் தகுதியான மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை போன்ற முயற்சிகள், சென்னை ஐஐடி-யை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது.  பவர் கிரிட் நிறுவனத்திற்கு சென்னை ஐஐடி நன்றியைக் கொல்லிக்கொள்கிறது.  நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் இத்தகைய உதவித்தொகையை விரிவுபடுத்த சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

“பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அளித்திருக்கும் இந்த ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று சென்னை ஐடிடியின் பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா தெரிவித்துள்ளோம்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் கணக்கில், ” இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் பவர் கிரிட் கார்ப்பரேசன் மிகுந்த பாகுபாட்டுடன் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் ரூ.10.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.  எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்த நிதியாண்டில், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, ஐஐடி மெட்ராஸ் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை இதுவாகும். ஆனால், இதில் எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்கள் ஒரு ரூபாய் கூட பெறாமல் இருப்பது வேதனையளிக்கும் செயலாகும். நியாயமற்ற, சாதி கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிதியை  மின்சாரத் துறை அமைச்சகம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Source: Hindustan Times

அமைச்சர்களை மிரட்டும் ரவுடி ஜீயர் – விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு நேர்காணல்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்