Aran Sei

பாரத் மாதாவுக்கு ஜே என்று கூறாத மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பேராசிரியர் – ஐஐடியில் நடப்பது என்ன?

.ஐ.டி காரக்பூரில் பணிபுரியும் பேராசிரியர் இணைய வகுப்பின்போது தேசிய கீதத்திற்கு எழுந்திரிகாத  பாரத் மாதாவுக்கு ஜே என்று கூறாத மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஐ.ஐ.டி காரக்பூரில் பணிபுரியும் இணை பேராசிரியர் சீமா சிங் இணைய வகுப்பின்போது மாணவர்களைத் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கச் சொல்லி வற்புறுத்தியும், பாரத் மாதகி ஜி என்று கூறச்சொல்லியும் அவ்வாறு செய்யாத மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மதிப்பெண்களைக் குறைப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

மகராஷ்டிராவில் ஒரே ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட இறந்த 22 உடல்கள்: ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் நேர்ந்த அவலம்

பேராசிரியர் சீமா மாணவர்களை மிரட்டும் அந்தக் காணொளியில், “உங்கள் நாட்டிற்காக குறைந்தபட்சம் நீங்கள் இதைச் செய்ய வேண்டும், நீங்கள் வகுப்பை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் புஜ்யத்தை தான் மதிப்பெண்ணாய் தருவேன். தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இரண்டு நிமிடம் உங்களால் எழுந்து நிற்க முடியாதா? முறைதவறி பிறந்தவர்களே உங்கள் பெற்றோர்களைச் சொல்ல வேண்டும்” என்று அச்சுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் பகிர்ந்துள்ள மற்றொரு வீடியோவில், பேராசிரியர் சீமா “சிறுபான்மை விவகாரக் குழு அல்லது கல்வி அமைச்சகத்திடமே முடிந்தால் நேரடியாக புகார் அளித்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள ஐ.ஐ.டி காரக்பூர் அம்பேத்கர் பெரியார் பூலே வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள்,”பேராசிரியர் சீமா தனது சாதிய மனநிலையை மூடிமறைக்க உயர்-தேசியவாதத்தைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்திய உச்சநீதிமன்றமே தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கக் கட்டாயமில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அவர் மாணவர்களை எழுந்து நிற்கும்படி கட்டாயப்படுத்துகிறார். இருப்பினும், மாணவர்கள் அவரது கோரிக்கைக்கு இணங்கும்போது கூட, சாதிய இழிவை மாணவர்களின் மீது மீண்டும் பயன்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் இந்நிகழ்வுக்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் #End_Casteism_In_IIT எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்வுக்கு  கண்டனம் தெரிவித்து வருகிக்ன்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்