Aran Sei

‘யோகா பயிற்சி வழியே உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும்’ – ஐஐடி ஆய்வில் தகவல்

கொரோனா நோயுற்றவர்களுக்கு உயிர்காக்கும் சாதனமாக மாறியுள்ள ஆக்சிஜன் சிலிண்டருக்கு நாடு முழுவதும் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில், லிங்க முத்திரை என்னும் யோக பயிற்சி செய்து உடல் வெப்பத்தை அதிகரிப்பதன் வழியாக ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை ஐஐடி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி-யின் பயோ மெடிகல் பொறியியல் துறை நடத்திய ஆய்வில்,  ‘லிங்க முத்திரை’ எனப்படும் யோக முறையான இம்முத்திரையை செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதாக சென்னை ஐஐடி தெரியவந்துள்ளது.

பாரத் மாதாவுக்கு ஜே என்று கூறாத மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பேராசிரியர் – ஐஐடியில் நடப்பது என்ன?

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி பிடித்து மூச்சு திணறல் ஏற்படுவதால், வெண்டிலேட்டர் கருவி வழியாக சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இந்த லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைந்து, உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும்போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை கண்டறிந்துள்ளதாக ஐஐடி நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஐஐடி இட ஒதுக்கீடு: ‘சமூக நீதிக்கு எதிரான ஆய்வுக்குழுவை உடனே நிராகரியுங்கள்’- மத்திய அரசிடம் சு. வெங்கடேசன் கோரிக்கை

“லிங்க முத்திரை செய்வதற்கு முன் இருந்த ஆக்சிஜன் அளவை காட்டிலும் முத்திரை செய்தபிறகு ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. தெர்மல் இமேஜிங், இசிஜி ஆகிய மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டுள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சையைப் போல இந்த யோக முத்திரையைச் செய்யலாம்.” என்று பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Source : News18 Tamilnadu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்