Aran Sei

‘மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்’ – பிஎப்ஐ தடைக்கு கேரள சிபிஎம் கருத்து

தவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊபா சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஒன்றிய அரசு உத்தரவு

2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று 2வது நாளாக நடைபெற்ற சோதனையை அடுத்து தடை அமலுக்கு வந்துள்ளது.

இந்த தடை உத்தரவு குறித்து கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர் எஸ் எஸ் அமைப்பினைத் தான் ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும். அதுதான் நாட்டில் பல்வேறு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குகிறது. அது தடை செய்யப்படுமா? எந்த ஒரு அமைப்பையும் தடை செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பது ஏற்கெனவே தடைகளை சந்தித்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தடை செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

ஒரு கட்சியையோ அமைப்பையோ தடை செய்வதால் அது கொண்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வந்துவிடாது. வேறு ஒரு புதிய பெயரில் புதிய அடையாளத்துடன் அது மீண்டும் முளைத்து வரலாம். அதனால் அவ்விதமான அமைப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்ட பூர்வ நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவாரங்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. இரண்டு மதவாத சக்திகள் மோதிக் கொண்டால் அவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று வலுப்படுத்திக் கொள்கின்றன. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source : the print

தனக்கு தானே குண்டு போடும் சங்கிகள் | வெடிகுண்டுப் பயிற்சி எடுக்கும் மங்கிகள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்