Aran Sei

“அரசியலில் தோற்றால் இப்படித்தான் எதிர்கொள்வீர்களா” – அமித் ஷாவைச் சாடும் டெல்லி துணை முதல்வர்

credits : outlook

இன்று, நான் வீட்டில் இல்லாத சமயத்தில், பாஜக குண்டர்கள் எனது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து என் மனைவியின் குழந்தைகளைத் தாக்க முயன்றுள்ளனர் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கெஜ்ரிவால் அரசாங்கத்திடமிருந்து நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரிக் காலவரையின்றித் தர்ணா நடத்தும் மேயர்களையும் பாஜகவின் நகராட்சி தலைவர்களையும் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் குற்றம்சாட்டி பாஜக தொண்டர்கள் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை

அப்போது ”பாஜக குண்டர்கள் துணை முதலமைச்சரின் வீட்டில் இல்லாத சமயத்தில் அவர் வீட்டைத் தாக்கியுள்ளனர். டெல்லிக் காவல்துறையின் உதவியுடன் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

பொய் பரப்புவதை எதிர்த்தால் தேச துரோகியா ? – கட்சியிலிருந்து வெளியேறிய பாஜக நிர்வாகி

பாஜக குண்டர்கள் துணை முதல்வர் சிசோடியா வீட்டிற்குள் நுழைவதைக் காவல்துறையினர் தடுக்கவில்லை எனவும் குண்டர்களுக்கு உதவும் வகையில் அவரது வீட்டைச் சுற்றியிருந்த தடுப்புகளையும் அகற்றியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனிஷ் சிசோடியா தன் ட்விட்டர் பக்கத்தில் “இன்று, நான் வீட்டில் இல்லாத சமயத்தில், பாஜக குண்டர்கள் எனது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து என் மனைவியின் குழந்தைகளைத் தாக்க முயன்றனர். நீங்கள் இன்று டெல்லி அரசியலில் தோற்றால், நீங்கள் எங்களை இப்படித்தான் எதிர்கொள்வீர்களா? என அமித் ஷாவிடம் தன் ட்விட்டர் பக்கத்தின் மூலமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்

மனிஷ் சிசோடியா வீட்டில் நடந்த தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் துணை முதல்வர் வீட்டில் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். அவர் வீட்டில் இல்லாத போது குண்டர்கள் போலீஸ் முன்னிலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்தனர் எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பாஜக குண்டர்கள் மனிஷ் சிசோடியாவின் வீட்டிற்குள் நுழைகின்ற காணொலியையும் செய்தியாளர் சந்திப்பில் காட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி முன் வைத்துள்ள குற்றச்சாட்டை டெல்லி பாஜக மறுத்துள்ளது. பாஜக துணைத் தலைவர் அசோக் கோயல் தேவ்ராஹா, ”பாஜகவின் மேயர்கள் மற்றும் பிற நகராட்சித் தலைவர்களைக் கொல்லும் சதித் திட்டம் அம்பலமானதையடுத்து அந்த விஷயத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப ஆம் ஆத்மி தலைவர்கள் இது போன்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக டெல்லி பாஜக துணைத் தலைவர் அசோக் கோயல் தேவ்ராஹா கூறியுள்ளார்.

” விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்று சொல்வதா! ” – பாஜக அமைச்சருக்கு கண்டனம்

”பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்தவே நாங்கள் சிசோடியாவின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தினோம் எனவும்” அவர் கூறியுள்ளார்.

நாட்டில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தடையாக இருக்கும் ஜனநாயகம் – பாஜக செய்தி தொடர்பாளர்

முன்னதாக, நேற்று (9/12/20) டெல்லி பாஜக தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மனிஷ் சிசோடியா மற்றும் துர்கேஷ் பதக் பாஜக தலைமையின் கீழ் செயல்படும் நகராட்சியின் தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர் என தி எகாநாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த பதக் ஒருவருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதும் அவர்களைப் பற்றி அவதூறு செய்வதும் பாஜகவின் வாடிக்கை எனக் கூறி பாஜக குற்றச்சாட்டை புறந்தள்ளியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்