Aran Sei

ஆந்திரவில் ஆட்சிக்கு வந்தால் ரூ.50-க்கு தரமான மது – மாநில பாஜக தலைவர் வாக்குறுதி

ந்திராவில் 2024 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அதிக விலைக்கு விற்கும் மதுவை ரூ.75க்கு கொடுப்போம். நல்ல வருவாய் கிடைத்தால் ரூ.50 க்கு கூட கொடுப்போம். என உறுதியளிக்கிறேன்” என்று ஆந்திர பாஜக தலைவர் சோமு வீரராஜு தெரிவித்துள்ளார்.

அமராவதியில் நேற்று(29.12.2021) பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஆந்திராவில் ஏராளமான வளங்கள், நீண்ட கடற்கரை உள்ளது. ஆனால், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசும், இதற்கு முன்னர் ஆண்ட தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஈஎஸ்ஐ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு – பின்பற்றப்படாத இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு

“ஆந்திராவில் சுமார் ஒரு கோடி பேர் மது குடிக்கிறார்கள் அவர்களுக்கு நான் ஒரு உறுதியளிக்கிறேன். நீங்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் அதிக விலைக்கு விற்கும் மதுவை ரூ.75க்கு கொடுப்போம். நல்ல வருவாய் கிடைத்தால் ரூ.50 க்கு கூட கொடுப்போம். அதுவும் தரமான முறையில் கூட கொடுப்போம்” என்று சோமு வீரராஜு உறுதியளித்தார்.

தற்போது ஆந்திர மாநிலத்தில் விற்கப்படும் மதுவின் விலை மிக அதிகமாக உள்ளது. அதனால் ஆந்திராவில் மதுகுடிக்கும் ஒரு நபர் சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 செலவு செய்கிறார். இப்படி மக்களிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சுவது போல அதிகப் பணத்தை வசூலித்து, அதன் மூலம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சில நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

பாக்ஸ்கான் நிறுவனத்தில் குறைபாடு இருந்தது உண்மைதான் – ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்

ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அமராவதியை தலைநகராக்கி, அடுத்த 3 ஆண்டுகளில் இப்பகுதியை மேம்படுத்திக் காட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளைக் குரைக்கும் நாய்கள் என்றும், இடதுசாரி கட்சிகள்தான் நாட்டை அழித்து விட்டனர் என்றும் ஆந்திர பாஜக தலைவர்  சோமு வீரராஜு குற்றம் சாட்டினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்