Aran Sei

‘ஃபைசர் தடுப்பூசியை முன்கூட்டியே அனுமதித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்’ – எழுத்தாளர் சேத்தன் பகத்

ந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கு டிசம்பர் மாதமே அனுமதியளித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என எழுத்தாளர் சேத்தன் பகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”மிகவும் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் சிறந்த தடுப்பூசிகளில்  ஒன்றான ஃபைசர் தடுப்பூசி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தது. அனுமதியளிக்க வேண்டுமானால் இந்தியாவில் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் ஃபைசர் நிறுவனம், அதன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. டிசம்பரிலிருந்து தடுப்பூசியை நாம்  அனுமதித்திருந்தால், எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும், என்பதை  கற்பனை செய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் ஆய்வு நடத்தாமலே பயன்படுத்தலாம் என கடந்த வாரம் மத்திய அரசு அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்