Aran Sei

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை – கேரள முதலமைச்சர் அறிவிப்பு

credits : the indian express

கேரளாவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படமாட்டாது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த கலந்தாலோசனை கூட்டம் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவத்திற்கான செலவை அரசு ஏற்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்த முடியாதவர்கள், பிற காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த முடியாதவர்கள் அரசு மருத்துவரிடம் சான்றிதழ் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2020இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 – ஒன்றிய அமைச்சர் தகவல்

டிசம்பர் 1 முதல் 15 வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உடல் நலப்பிரச்சினையால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் அரசு மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மேலும், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகுதான் பாடம் கல்விக்கூடங்களுக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிசெலுத்தாத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மக்களுடன் தொடர்பில் இருப்போர் வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும்.

இந்தப் பரிசோதனைகளுக்கு அவர்களே கட்டணத்தையும் செலுத்தி அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் குறித்த அச்சம் பரவி வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும்

சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த பேட்டியில் “ வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணிக்கவும், அவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கவும் கேரளாவின் 4 விமானநிலையங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன்விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறையினருக்கும் அனுப்பி வைப்போம். எச்சரிக்கை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் கேரளமாநிலத்தவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முதல்நாளில் ஒரு பிசிஆர் பரிசோதனையும், 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனையும் எடுத்து அதில் நெகட்டிவ் வர வேண்டும.ஒட்டுமொத்தமாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்