Aran Sei

தாலிபான்கள் தீவிரவாதிகளென்றால் பேச்சு வார்த்தை நடத்தியது ஏன்? ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? – ஒவைசி கேள்வி

Asaduddin-Owaisi-TW-1579431006

த்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸை இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய  ஏன் என்று இந்திய ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் படைக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனால்,  தாலிபான்கள் வென்று ஆப்கானிஸ்தானில் புதிய அரசை நிறுவவுள்ளனர். தற்போது அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு  வெளியேறி உள்ளது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர், இந்தியர்கள் நலன், ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸை இந்திய தூதர் தீபக் மிட்டல் நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி “தலிபான் தீவிரவாத அமைப்பா என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தோஹாவில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவரை இந்திய தூதர் சந்தித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அப்படி சந்தித்தது உண்மையென்றால் தலிபான் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தலிபான்கள் தீவிரவாதிகள் என்பது ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்றால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்பதையும் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்