Aran Sei

கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக் கூடாது- தேசிய ரத்த பரிமாற்ற குழு அறிவிப்பு

கொரனோ தொற்றுக்கான இறுதித்( இரண்டு)தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாதெனத் தேசிய ரத்த பரிமாற்றக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 17 அன்று, தேசிய ரத்த பரிமாற்றக் குழுவின்,  30 தாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரனோ தொற்றுக்கு இறுதிமுறைத் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்  28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக் கூடாது எனவும் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது எனவும்  முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய ரத்தமாற்ற ஆணையத்தின் இயக்குநர் சுனில் குப்தா  மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா தடுப்பூசி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

மத்திய சுகாதாரத்துறை கொரனோ தொற்றுக்கான முதல் மற்றும் கடைசி தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மேலும், இறுதித் தடுப்பூசி, எடுத்துக்கொண்ட இரண்டு வாரங்கள் கழித்து கொரானாவிற்கான எதிர்ப்புச் சக்தி உருவாகும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SOURCE:PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்