Aran Sei

முகக்கவசம் அணியவில்லையென்றால் பயணிக்க முடியாது – விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு

கொரோனா தொற்றுக்கால விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் 3 மாதத்திலிருந்து 2 வருடம்வரை  விமான பயணம் செய்ய அனுமதிக்கபடமாட்டார்கள் என்றும் விமான பொது போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

நேற்று இது தொடர்பான சுற்றறிக்கையை விமான பொது போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது

ஞாயிறு முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம் முடிவு

அந்த அறிக்கையில், விமான நிலையத்தில் தொற்றுக்கால விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களை குறித்து அலுவலர்கள் எச்சரித்த பின்னும், மீண்டும் தொற்றுக்கால விதிமுறைகளைப் பின்பற்றாமல் மீறினால் ‘விதிமீறியவர்கள்’ என்று வெளியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விதிமீறியவர்கள்’ கண்ணியமாக நடத்தப்படுவார்கள் என்றும் ஒருவேளை அதிகாரிகளைத் தாக்கினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் 10113 நிறுவனங்கள் – கொரோனா தொற்று எதிரொலி

மேலும் அதிகாரிகளை மதிக்காமல் திட்டினால் 3 மாதமும் ,தாக்கினால் 6 மாதமும் , கொலை மிரட்டல் விடுத்தால் 3 வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் பயணிக்கத் தடை விதிக்கப்படும் என்று விமான பொது போக்குவரத்து இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது.

SOURCE: THE HINDU 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்