Aran Sei

”மம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்கம் பாகிஸ்தானாக மாறிவிடும்” – வாக்காளர்களை மத ரீதியாக ஒருங்கிணைக்கும் பாஜக

credits : the wire

ந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான சுவேண்டு அதிகாரியின் தேர்தல் பிரச்சாரம், ”இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை மத ரீதியாக ஒருங்கிணைக்கும் நோக்கிலே இருக்கிறது” என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின், நந்திகிராம் தொகுதியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மம்தா பானர்ஜியின் முன்னாள் தளபதியும், சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டவருமான சுவேண்டு அதிகாரி களம் காண்கிறார்.

இந்நிலையில், நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய சுவேண்டு அதிகாரி, “பேகம் (மம்தா பானர்ஜி) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இம்மாநிலம் ஒரு சிறிய பாகிஸ்தானாக மாறிவிடும்” என்று கூறியுள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் களமிறங்கும் மம்தா: மூம்மடங்கு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் – சுவேண்டு அதிகாரி சவால்

இஸ்லாமிய வாக்காளர்களிடம் அபிமானம் பெற்றுள்ள மம்தா பானர்ஜியை ”பேகம்” என குறிப்பிடும் அதிகாரி, சமீபத்தில் நடந்த அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மம்தா பானர்ஜியை அவ்வாறே அழைத்துவருகிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்: பாஜகவில் சேர அழைப்பு

”மம்தா வழக்கமாக ஈத் முபாரக் என்று கூறுவார், அது அவருக்கொரு பழக்கமாகிவிட்டது. அதே பழக்கத்தைப் பின்பற்றி ஹோலி பண்டிகையின் போது ஹோலி முபாரக் என்று கூறுகிறார்” என்று அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

நந்திகிராமில் களமிறங்கும் மம்தா பானர்ஜி – உச்சகட்ட பரபரப்பில் மேற்கு வங்க அரசியல்

”அவர் ஒரு இந்துவைப் போல நடிக்க முயல்கிறார். அவர் தேர்தலில் நிற்கும் இடங்களுக்கு ஏற்றவாறு நடிக்கிறார். எக்ரா தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அவர், இஸ்லாமிய வாசகங்களை கூறுகிறார், நந்திகிராம் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அவர் இந்து மந்திரங்களை மிகவும் தவறாக கூறுகிறார்” என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பாஜக திரிணாமூல் காங்கிரசிடையே வலுக்கும் மோதல்

முன்னதாக அதிகாரி செய்த பிரச்சாரங்களிலும், நந்திகிராமில் பல பஞ்சாயத்துகள் சிறு பாகிஸ்தானாக உருவாகிவிட்டது எனவும், மம்தா இஸ்லாமிய ஊடுருவக்காரர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களின் உறவினர் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்