Aran Sei

எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

னது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில்லுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியரும், வெளியுறவுத்துறை முன்னாள் செயலருமான நிக்கோலஸ் பர்ன்சுடன் நடந்த இணையவழி கலந்துரையாடலின்போது நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் வருமானவரி சோதனை – பாஜகவின் தோல்வி பயம் என ராகுல் காந்தி கண்டனம்

அந்தக் கலந்துரையாடலின்போது , “நான் பிரதமரானால் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படவில்லை என்றால் வளர்ச்சி என்பதே கேள்விக்குள்ளதாகிவிடும் என்றும் அந்த உரையாடலின் போது ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளை, இனி சங் பரிவார் என அழைக்கப்போவதில்லை – ராகுல் காந்தி விளக்கம்

அதுமட்டுமல்லாது வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்றும் காணொளியில் ராகுல் தெரிவித்துள்ளார்

பாஜக அரசின் ஆட்சி குறித்து குறிப்பிட்ட அவர், “இந்தியாவில் தற்போது அரசியல் அதிகார மையங்கள் ஆளும் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது . நடுநிலையாக இருக்க வேண்டிய அமைப்புகள் நியாயமாகச் செயல்படவில்லை” என்றும் நிக்கோலஸ் பர்ன்சிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவை கட்டுப்படுத்த நினைக்கும் நாக்பூர் அமைப்பு : இளைஞர்கள் முறியடிக்க ராகுல் காந்தி வேண்டுகோள்

அசாமில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேட்பாளர் ஒருவரின் வாகனத்திலேயே எடுத்துச் செல்லப்பட்டது குறித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இணையவழி கலந்துரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காணொளியை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்

 

SOURCE ; PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்