மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் ஆளுருக்கு பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளநர் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறியுள்ள பிரத்யா பாசு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக நியமிப்பதில் சட்டப்பூவர்வமான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் போக்கு நீடித்தால், கேராளவில் நடந்ததுபோல், மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் முதலமைச்சரே வேந்தராக நியமிக்கப்படுவார் என்று பிரத்யா பாசு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று (24.12.21) மேற்குவங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர், அம்மாநிலத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் தனியார் பல்கலைகக்கழங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த சந்திப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றும், இது அதிர்ச்சியளிக்கக் கூடிய போக்கு என்றும் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.