Aran Sei

குற்றத்தின் தீவிரத்தன்மையில் கவனம் செலுத்தி பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு

credits : pti

நீதிமன்றங்கள் பிணை வழங்குவதற்கு முன்பு குற்றத்தின் தீவிரத்தன்மை குறித்து கவனம் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, கேரளாவில் பல்மருத்துவரை கொடூர ஆயுதங்களால் தாக்கிக் கொலைசெய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கேரள உயர்நீதிமன்ற அமர்வு பிணை வழங்கியதை கண்டித்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் பதிலடி கொடுக்காதது தான் துன்புறுத்தலுக்கு காரணம் – உச்சநீதிமன்ற அமர்வு

கடந்த செப்டம்பர் 2020 அன்று, காதலிலிருந்து விலகிய காதலியை, அப்பெண்ணின் காதலன் கொடூரமான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த நபர் கொலைக்கான ஆயுதத்தைக் கையில் எடுத்துச் சென்றதாகவும், அந்தப் பெண்ணின் தந்தையின் முன்பாகவே கொடூரமான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

திகார் சிறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிலை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றம்சாட்டப்பட்ட நபர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மேல்முறையீட்டு மனுவில் கேரள உயர்நீதிமன்ற அமர்வு பிணை வழங்கியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, “அந்தப் பெண்ணைக் கொலைசெய்ய குற்றம்சாட்டப்பட்டவர் ஆயுதத்தைக் கையோடு கொண்டு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாது கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

“எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும்?” என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வி தவறானது – காஞ்சா அய்லய்யா

“இந்த வழக்கின் விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம் கவனம் செலுத்தாமல் பிணை வழங்கியுள்ளது ” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் , நீதிமன்றங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதற்கு வழக்கின் பின்புலத்தில் கவனம் செலுத்துவது போன்று குற்றத்தின் தீவிரத்தன்மை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இயந்திரகதியில் பிணை வழங்கக் கூடாது என்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்