Aran Sei

மன்னிப்பு போதுமென்றால் நீதிமன்றம், சிறைச்சாலை எதற்கு; நுபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் – ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்

பிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தேசத்தின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த மன்னிப்பு தேவையில்லை. மாறாக, அவர் கைது செய்யப்பட வேண்டும் என ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் (ஜேஐஎச்) வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் சையது சதத்துல்லா ஹுசைனி, துணைத் தலைவர் பேராசிரியர் முகம்மது சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மோடி, நாட்டின் இளைஞர்களை வேலை இல்லாமல் ஆக்குகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

அதில், ”நுபுர் சர்மா மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு தவறுக்கு தண்டனை என்பது மன்னிப்பு கோருவது எனில், நம் நாட்டில் நீதிமன்றங்களும் சிறைகளும் தேவையில்லை. தொலைக்காட்சி விவாதத்தில் மத விமர்சனம் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நுபுர் சர்மா கைது செய்யப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் குறைந்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்களான தீஸ்தா சீதல்வாட், குஜராத்தின் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் கைது அதிர்ச்சி அளிக்கிறது. நுபுரின் விமர்சனத்தை பகிர்ந்தமைக்காக பத்திரிகையாளர் முகம்மது ஜுபைர் கைதாகியுள்ளார். இந்த கைது நம் நாடு எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

நுபுரின் தவறான விமர்சனத்திற்கு எதிராகப் போராடியவர்களின் குடியிருப்புகள் புல்டோசர்களால் இடித்து தள்ளப்படுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. மத வன்முறையை தூண்டிய அரசியல்வாதிகள், தொலைக்காட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இவர்களது மத வன்முறை பேச்சுக்களின் தாக்கமாகத்தான் உதய்பூர் சம்பவம், மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் தவறான அடையாளத்தால் ஒரு மூத்த வயதுடைய இந்து கொல்லப்பட்டதும் காரணம். பல்வேறு மத நம்பிக்கைகளை நிந்தனை செய்பவர்களை தண்டிக்க சட்டம் இயற்றுவது முக்கியம். மத வன்முறையை தூண்டுபவர்களில் மதத்திற்கு ஏற்றபடி இரு வேறு நடவடிக்கைகள் ஏற்க முடியாதது.

திருவண்ணாமலை: முகப்பருவைக் கிள்ளியதால் மாணவர் உயிரிழந்ததாக ஆசிரியர் மீது புகார் – அரசியல் பழிவாங்கல் என ஆசிரியர் குற்றச்சாட்டு

எதிர்பாராதவிதமான நம் நாட்டின் அரசியல் சூழல், மத வன்முறையை தூண்டுகிறது. இதில் ஒரு பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மத வன்முறையைத் தூண்டும் கருவியாகிவிட்டனர்” என்று ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Source: The hindu

குடுமியை வெட்ட தைரியம் இருக்கா? Vanchinathan Interview | | Police Haircutting students | Attrocities

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்