Aran Sei

விவசாய பெண்களின் நாடாளுமன்றம் : எங்களின் உணவை ஏன் அம்பானிக்கும் அதானிக்கும் விற்கிறீர்களென ஒன்றிய அரசிற்கு கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்  வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பெண் விவசாயிகள் “மகிழா கிசன் சன்சாத்” எனப்படும் பெண்கள் நாடாளுமன்றத்தை நடத்தியுள்ளதாக  தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சுமார் 2௦௦ பெண்கள் அத்தியாவசிய பொருட்களின் திருத்தம்குறித்து, முழு வீச்சில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய விவசாயிகளின் நாடாளுமன்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை நடத்த திட்டம்

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், “ஏன் மோடி அரசு கொரோனா காலத்தைச் சட்டம் இயற்றப் பயன்படுத்துகிறது? அரசு ஏன்  எங்களின் உணவை  அம்பானிக்கும் அதானிக்கும் விற்கிறது? என்றும் , உணவு அத்தியாவசியமானது இல்லை என்றால், வேறு என்ன?  என்றும், “இந்த அரசு எங்களுக்கு ஆக்சிஜன் கூட பெற்றுத்தரவில்லை, அப்படிப்பட்டதை எவ்வாறு எங்கள் உணவுக்காக நம்ப முடியும்? என்று  கேள்வி எழுப்பியுள்ளதாக  தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் விவசாயி சொப்னா, “இந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமல்லாது, பெண்களுக்கு நாடாளுமன்றத்தில்  5௦ விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றம் என்பது இல்லாமல் சமூக நீதி என்பது இல்லை” என்று  கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் – வெளிநடப்பு செய்த பாஜக எம்பிக்கள்

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள் இந்தி, பஞ்சாபி, ஹரியான்வி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரையாடியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில்  சமூக ஆர்வலர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாகவும், குறிப்பாகச் சமூகசெயற்பட்டாளர் மேதா பட்கர், நடிகை குல் பானங்  ஆகியோர்   கலந்துகொண்டுள்ளதாகவும்   தி வயர் செய்தி கூறுகிறது.

கொரோனாவால் சுற்றுலாத் துறையில் 2 கோடி பேர் வேலையிழப்பு – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

இந்தக் கூட்டத்தில் நீர் பற்றாக்குறை, உயரும் எரிபொருள் விலை மற்றும் பெண்கல்வி ஆகியவைக் குறித்து மூன்று அமர்வு நடந்ததாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்