Aran Sei

பரிசோதனை மேற்கொள்ளும் 1000 கர்ப்பிணிகளில் மூவருக்கு எச்.ஐ.வி தொற்று- மேகாலயா அரசு தகவல்

மேகாலயாவில் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் 1000 கர்ப்பிணிகளில் மூவருக்கு எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில பெண்கள் நலனுக்கான சட்டமன்ற குழுஅறிவித்துள்ளது.

மேலும், எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதை தடுக்க பாலியல் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கான திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், இக்குழுவின் தலைவருமான அம்பரீன் லிங்டொக், இந்தப் புள்ளிவிவரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரித்திருப்பது குறித்து அரசு முறையான ஆய்வை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி

இந்நிலையில், பெண்கள் நலனுக்கான சட்டமன்ற குழு, பாலியல் தொழிலாளர்களைக் கண்டறிய வேண்டுமென மேகாலயா மாநில காவல் துறைக்கும், சமூக நலத்துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஷில்லாங் பகுதியில் உள்ள 200 பாலியல் தொழிலாளர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு கழக தலைவர் தெரிவித்துள்ளார்.

source; THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்