Aran Sei

கோவாக்சின் தடுப்பு மருந்து  விற்பனைக்கு ராயல்டி கிடைக்கும் – இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தகவல்

பாரத் பயோடெக் நிறுவனமும்(பிபிஐஎல்) இந்திய மருத்துவ ஆய்வு கழகம் (ஐசிஎம்ஆர்) இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பு மருந்தின் அறிவுசார் சொத்துரிமை பகிரப்பட்டு இருப்பதால், ராயல்டி கிடைக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

”பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் இடையே கையெழுத்தாகி இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மருந்து விற்பனையின் நிகர லாபத்தில் ராயல்டி மற்றும் உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மருந்து அட்டையில் ஐசிஎம் ஆர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூஸ் ஆஃப் வைராலஜியின் பெயர் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. தற்போது அவ்வாறு அச்சிடப்ப்பட்டே விற்பனைக்கு வருகிறது” என ஐசிஎம்ஆரின் தலைமை இயக்குநர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார். இருப்பினும் எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்று அவர் தெடிவிக்கவில்லை.

ஐசிஐசிஐ வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் – வழிகாட்டுதல்களை மீறியதால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை

மத்திய அரசுக்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டும் கோவாக்சின் மாநில அரசுகளுக்கு ரூபாய் 600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 1,200க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மாநில அரசுகளுக்கான விலை 400 ரூபாயாக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்குதான் ஒரே வழி – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

மார்ச் வரை மத்திய அரசு  4 கோடி டோஸ் கோவாக்சின் மருந்தை வாங்கியது.  2 கோடி டோஸிற்கான ஆர்டரில்  பாதி (88 லட்சம் டோஸ்) ஏப்ரல் மாதத்தில் விநியோக்கிப்பட்டுள்ளது.  மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் தேவைக்காக 5 கோடி டோஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்