Aran Sei

பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் – தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை

ந்தியாவிற்கு எதிராக பரப்புரை செய்ததற்காகவும், போலிச் செய்திகளைப் பரப்பியதற்காகவும் இருபது யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் அண்மையில் முடக்கப்பட்ட நிலையில், நாட்டிற்கு எதிராக சதி செய்யும் நபர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 19), இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அனுராக் தாக்கூர், “அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். உலகெங்கிலும் உள்ள பல பெரிய நாடுகள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யூடியூப் நிறுவனமும் முன் வந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

மேலும், “எதிர்காலத்திலும், இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய் செய்திகளைப் பரப்புவது மற்றும் சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கணக்குகளை (சமூக வலைதள பக்கம்) முடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கையால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இருபது யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை, இந்தியாவுக்கு எதிரான பரப்புரை செய்ததாகவும், போலிச் செய்திகளைப் பரப்புவதாகவும் கூறி, அவற்றை முடக்க அமைச்சகம் உத்தரவிட்டது.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

கடந்த டிசம்பர் மாதம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த 20 யூடியூப் சேனல்களும் இணையதளங்களும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் போலியானவை. இவை இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்களைக் குறித்து போலியான செய்திகளைப் பரப்பி வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள  சிறுபான்மை சமூகங்கள், அயோத்தி ராமர் கோவில், மறைந்த முப்படை முன்னாள் தளபதி பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான உள்ளடக்கத்துடன் பொய் செய்திகளை வெளியிட்டுள்ளன” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்