Aran Sei

ஐஏஎஸ் நியமன விதிகளில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் – கூட்டாட்சிக்கு எதிரானது என தமிழக, கேரள முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம்

ந்திய நிர்வாகப் பணி (கேடர்) விதிகள், 1954 சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் குறித்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவை எதிர்த்துப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவரை 6 முதலமைச்சர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 23) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதனை எதிர்த்து இந்த திருத்தங்கள் நாட்டின் கூட்டாட்சி நிர்வாகத்திற்கு எதிரானவை என்று கவலை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி , சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் இது சம்பந்தமாக ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு நடைமுறையை பின்பற்றாமலேயே, ஒன்றிய அரசுடைய பிரதிநிதித்துவத்தின் கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு இந்த சட்டத்திருத்தம் வழங்குகிறது

ஐஏஎஸ் நியமன விதிகளில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டம்: கூட்டாட்சிக்கு எதிரானது என மாநிலங்கள் எதிர்ப்பு

“திருத்தப்பட்ட வரைவின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒன்றிய அரசால் ஒரு அதிகாரி, ஒரு மாநிலத்திலிருந்து நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பணியிடத்திலும் நியமிக்க முடியும். அந்த அதிகாரியின் உடன்பாடு இல்லாமலும், அவர் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் இல்லாமலும், அவருடைய பணியிலிருந்து உடனடியாக அவர் விடுவிக்கப்படலாம்” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்திய நிர்வாகப் பணி சம்பந்தமாக ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள் இந்தியாவின் “கூட்டாட்சி அரசியல் மற்றும் மாநில சுயாட்சியின்” “வேரிலேயே தாக்குதல் தொடுப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகள் தங்கள் பதவிக்காலத்தை ஒன்றிய அரசால் எப்போது வேண்டுமானாலும் தண்டனை விதிக்கப்படுமோ என்ற நிரந்தர பயத்தில் கழிக்கும் நிலைமை உள்ளது என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் கொள்கைகளை செயல்படுத்துவதில் இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகளிடையே ஒருவித பயத்தையும், தயக்கத்தையும் இது உருவாக்கும்” என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Source : scroll

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்