நாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குறைந்தபட்சம், குற்றச்சாட்டுகளை வைப்பதற்காக, தான் பயன்பட்டதற்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
விவாதத்தில் பங்கேற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, குடியரசுத் தலைவரின் உரையில் எதிர்கட்சிகள் பங்கேற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலத்தை சுட்டிக்காட்டி பேசிய மோடி, கடவுளின் அருளால் அதை வெற்றிகரமாக எதிர்கொண்டோம் என்று கூறினார். இந்த வெற்றி அரசாங்கத்தையோ எந்த தனிநபரையோ சாராது என்று கூறிய மோடி இது மக்களின் வெற்றி என்றும் தெரிவித்தார்.
மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கொரோனா பொது முடக்க காலத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்டபோது, எதிர்கட்சிகள் அதை கடுமையாக விமர்சித்தன.
அந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசிய மோடி, “சாலையோர குடிசையில் உள்ள பெண்ணும் விளக்கை ஏற்றினார். அவருடைய நம்பிக்கையை நீங்கள் கேலி செய்கிறீர்கள?” என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டாட்சியே நமது பலம் என்று கூறிய மோடி, கொரோனாவை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒன்று பணியாற்றியதாக கூறினார்.
“ஜனநாயகம் பற்றி இங்கு பிரசங்கங்கள் கொடுக்கப்பட்டன. ஏற்றுக்கொள்ள முடியாத சில கருத்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்திய ஜனநாயகம் இந்த வகையில் தோலுரிக்கப்படக் கூடாது. உறுப்பினர்கள் பேசும் போது, அவர்கள் மேற்கு வங்காளத்தைப் பற்றி பேசுகிறர்களா அல்லது ஒட்டு மொத்த நாட்டையும் பற்றி பேசுகிறார்களா என்று, எனக்குள் நான் கேட்டுக்கொண்டேன்” என்று மோடி தெரிவித்தார்.
‘மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3-4 தொழிலதிபர்கள்தான் கடவுள்’ – ராகுல் காந்தி விமர்சனம்
உலகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும்போது, முன் எப்போதும் இல்லாதவகையில் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக கூறிய மோடி, அடுத்து ஒரு அந்நிய நேரடி முதலீடு வரவுள்ளது, அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம், வெளிநாட்டு சீர்குலைவு தத்துவம் என்று கூறினார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், பணக்கார விவசாயிகள் என்றும், இடைத்தரகர்கள் என்றும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசிய மோடி, நாட்டின் 68% விவசாயிகள், அதாவது 12 கோடி விவசாயிகள், 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் என்று கூறினார்.
“அந்த 12 கோடி பேரை பாதுகாப்பது நமது பொறுப்பில்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர் “அதற்கு தீர்வைக் காண வேண்டாமா?” என்று, விவசாய சட்டங்களை நியாயப்படுத்தி பேசினார்.
“நாட்டின் திறனை பயன்படுத்துவத்தும் வழியில், தடையாக உள்ள அனைத்தையும் நீக்க வேண்டும் என்பதே நம்முடைய எண்ணம்” என்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை சுட்டிக்காட்டிய மோடி, மன்மோகன் சிங்கின் கனவை, மோடி நிறைவேற்றுகிறார் என்பதில் நீங்கள் பெருமைகொள்ள வேண்டும் என்று கூறினார்.
விவசாய சட்டங்களை எதிர்க்கும் சிலர், இதை போன்ற சட்டங்களை நிறைவேற்றிவர்கள் என்பது நகைப்புக்குரியது என்றும் மோடி குற்றம்சாட்டினார்.
பசுமை புரட்சி திட்டத்தை நடைமுறை படுத்தும்போது, காங்கிரஸ் கட்சியை, அமெரிக்காவின் ஏஜெண்டுகள் என்று இடதுசாரிகள் அழைத்தாக கூறிய மோடி, அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எதிர்ப்புகளையும் மீறி அதை நடைமுறைப்படுத்தியதன் பலனாய், தற்போது உபரி உற்பத்தை பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.
திக்ரி எல்லையில் விவசாயி தற்கொலை – விவசாயச் சட்டங்களை அரசு திரும்ப பெறாதததால் விரக்தி
போராடுவது உங்கள் உரிமை என்று கூறிய பிரதமர், ஆனால், வயதானவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று இந்த அவையின் மூலம் உங்களை (விவசாயிகள்) கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதார விலை இருந்தது, இருக்கிறது, அது நீடிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டின் பிரிவினையின்போதும், 1984ஆம் ஆண்டு (டெல்லியியில், சீக்கியர்களுக்கு எதிராக) நடைபெற்ற கலவரத்தையும் சுட்டிக்காட்டிய மோடி, சீக்கியர்கள் மத்தியல், சிலர் தவறான எண்ணத்தை புகுத்துவதாக கூறினார்.
சீக்கியர்கள் இந்த நாட்டிற்கு செய்துள்ளதை எந்த அளவிற்கு புகழ்ந்தாலும் தகும் என்று கூறிய மோடி, சீக்கியர்கள் குறித்து இந்த நாடு பெருமைகொள்கிறது என்றும் கூறினார்.
சிலர், போராட்டத்தின் மூலம் மட்டுமே பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்று கூறிய மோடி, அத்தகைய நபர்களை அனைத்து போராட்டங்களிலும் பார்க்க முடியும் என்றும், அவர்கள் உங்களுடைய அரசாங்கங்களுக்கும் எதிராக செயல்படலாம் என்று எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தை குறிப்பிட்டு, “விவாதம் நன்றாக இருந்தது. விவாதம் நடைபெற்ற சூழலும் நன்றாக இருந்தது. என்னை நோக்கி பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்காகவாது நான் உங்களுக்கு பயன்பட்டேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த கொரோனா காலத்தில், நீங்கள் வீட்டில் அடைபட்டிருந்திருப்பீர்கள், அப்போது வீட்டில் சில சச்சரவுகள் நிச்சயம் நடந்திருக்கும். இப்படியாவது உங்கள் கோபத்தை தணித்துக் கொள்ளுங்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதில் உரையில் கூறினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.