Aran Sei

’அக்டோபர் 2க்குள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைவேன்’ – ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளுக்குள் இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக (இந்து தேசமாக) அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஜலசமாதி அடைவேன் என்று உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்  எச்சரித்துள்ளார்

ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ். இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாதக் கூறியுள்ளார்.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

ஏற்கெனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இது குறித்து மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குநர் நவீன் ”அதுக்கு பேரு சூசைட் அட்டம்டு. உள்ள புடிச்சி போட்டுறுவாங்க மகாராசா” என்று சாமியாரை ட்விட்டரில் பகடி செய்துள்ளார்.

Source: Zee news

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்