Aran Sei

‘ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்’ – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஊழியர்களுக்கு கடிதம்

திக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்  என்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள   சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி  ஊழியர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

என்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகளே, உங்களுடன் நேருக்கு நேர் இருந்து பிரியாவிடை சொல்ல முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். இறுதியாக, எனது சில நடவடிக்கைகளால் உங்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்குமானால் அவை எப்போதும் தனிப்பட்ட முறையிலானவை அல்ல என்பதை தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள். அந்த நடவடிக்கைகள் நீதித்துறை கட்டமைப்புக்கு அவசியம் என்று நான் கருதினேன் என்று சஞ்சீப் பானர்ஜி கூறியுள்ளார்.

‘சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வாதரம் அளிக்கப்பட வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நானும் ராணியும் (சஞ்சீப் பானர்ஜியின் மனைவி) எப்போதும் நீங்கள் எங்கள் மீது செலுத்திய மரியாதை மற்றும் அன்பால் நெகிழ்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூகத்தை குறிப்பிட்ட அவர், நாட்டின் சிறந்த சமூகங்களில் ஒன்று நீங்கள்தான். அதிகம் பேசக்கூடிய சில நேரம் வயோதிகனான என்னை அமைதியாக சகித்துக் கொண்டீர்கள். நான் உகந்ததை விட அதிகமாகவே மரியாதை செலுத்தினீர்கள், புரிந்து கொண்டீர்கள். உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று சஞ்சீப் பானர்ஜி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

நீதிமன்ற பதிவுத்துறை பற்றி குறிப்பிடும்போது, உங்களுடைய திறமைகள் நிர்வாகத்தை எளிமையாக்கின. நீதித்துறை மற்றும் அதன் நடைமுறைகளை மேம்படுத்துவதில் நீங்கள் காட்டிய நேர்மையை நான் அங்கீகரிக்கிறேன். நீதித்துறை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை பேண இதேபோல செயல்படுங்கள் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற ஊழியர்கள் பற்றி குறிப்பிடும்போது, எனக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்த உங்கள் அனைவருக்கும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பணியாற்றி வரும் ஆதிக்க கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்ற வருத்தம்தான் எனக்கு என்று சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதியை கொன்றவரின் மகன் காவல்துறையால் சுட்டுக்கொலை – உடலைக் கேட்ட தந்தை போராட்டம்

கடிதத்தின் கடைசி பத்தியில், நானும் ராணியும் எங்களுடைய மாநிலம் போல உரிமையுடன் இந்த அழகான மற்றும் சிறந்த மாநிலத்தில் வாழ்ந்த கடந்த பதினோரு மாதங்களாக எனது பதவிக்காலத்தில் கிடைத்த உங்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அந்நினைவுகளுடன் நாங்கள் புறப்படுகிறோம் என்று சஞ்சீப் பானர்ஜி கடிதத்தில் கூறியுள்ளார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்