Aran Sei

‘இந்துப் பெண்களை இஸ்லாமியர்கள் பார்த்தால் வெட்டுவேன்’ – பாஜக எம்.எல்.ஏ., ராகவேந்திரா சிங்

ஸ்லாமியர்களே கவனமாகக் கேளுங்கள், எதாவது ஒரு இந்து உங்களால் இழிவுபடுத்தப்பட்டால், எந்த இந்துப் பெண்ணையாவது நீங்கள் பார்த்தால் நான் உங்களைச் சரமாரியாகத் தாக்கி வெட்டுவேன்” என்று சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு காணொளியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திரா சிங் கூறியுள்ளார். இதனைக் கூறிய பிறகு அந்த பிரச்சார கூட்டத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அந்த காணொளியில், “உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் தனக்கு வாக்களிக்காத இந்துக்களின் நரம்புகளில் இஸ்லாமியர்களின் இரத்தம் இருக்கிறது. அத்தகைய இந்து மத துரோகிகள் அழிக்கப்படுவார்கள்” என்று ராகவேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

கே.பி.எஸ்.மணி – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்

“நீங்கள் என்னை அவமதித்தாலும் அல்லது துரோகம் செய்தால் கூட பரவாயில்லை, ஆனால் நீங்கள் எங்கள் இந்து மதத்தை அவமானப்படுத்த முயன்றால், நான் உங்களை அழித்துவிடுவேன்” என்று ராகவேந்திரா சிங் அதில் மேலும் கூறியுள்ளார்.

“கடந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகு இங்கு இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் குறைந்து விட்டது. இந்து பெண்களை எந்த இஸ்லாமியராவது ஏறெடுத்து பார்த்தால் கூட அவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்” என்று ராகவேந்திரா சிங் பேசியிருக்கிறார்.

சமூக அமைதியைக் குலைக்கும் பூணூல் அறுப்பு போராட்டம் – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

இஸ்லாமியர்களின் தாடியை மழித்து இந்து மதத்திற்கு மாற்றப் போகிறேன். இஸ்லாமியர்கள் இங்கு வாழ விரும்பினால் இந்து மத முழக்கங்களைச் சொல்ல வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று ராகவேந்திரா சிங் பேசிய காணொளி ஏற்கனவே சர்ச்சையாகித் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

Source : The Wire

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்