Aran Sei

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஆறு ஆண்டுகளுக்குப்  பிறகு நிரபராதி  என்று விடுவித்து  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான  குற்றம் பொய்யாகப் புனையப்பட்டுள்ளது  என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

அவர்  கடந்த மே 18, 2௦15  அன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று அவர்மீதான வழக்கிலிருந்து அவரை விடுவித்த நீதிமன்றம்,  “தலித் சமூகத்தைச் சார்ந்த குற்றம்சாட்டப்பட்டவர்  மீது பெண்ணின் பெற்றோரின் பாரபட்சமான மனப்பான்மை காரணமாக இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவரின் வீட்டு வாசல் முன்பு நாய் மலம் கழித்ததற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அவர் நான்கு சிறுமிகளின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி நாயின் உரிமையாளர் போலியாகக் புகார் அளித்திருக்கிறார் .

இந்நிலையில், அவர் மீதானக் குற்றச்சாட்டுப் பொய் எனக் கூறிய நீதிமன்றம்,  குற்றம்சாட்டியவர்  ஒடுக்கப்பட்டச் சமுகத்தைச் சேர்ந்தவருக்கு இரண்டு மாதத்திற்குள் 1 லட்ச ருபாய் இழப்பீடாக  வழங்க வேண்டும் என்றும்   உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “என்மீது புகார் அளித்தவர்களை நான் மன்னித்து விட்டேன். எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் தலித் என்பதற்காகவே குற்றம்சட்டப்பட்டேன். எனது வாழ்நாளில் ஆறுவருடங்கள் சென்று விட்டது”  என்று கூறியுள்ளார்.

மேலும், “நான் எப்போதும் எனது கனவுகளில் பறந்துக் கொண்டே இருப்பேன். விசித்திரமான விஷயம் என்னவென்றால், இப்போது நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்.ஆனால்,  எனது கனவுகளில் நான் பரப்பதை நிறுத்திவிட்டேன். நான் மீண்டும் ஒருமுறை  பறக்க விரும்புகிறேன்”. என்றும் ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆறுவருடங்களுக்குப் பிறகு அவர் அவரது குடும்பத்தோடு உள்ளார்.

Source: The Indian Express.   

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்